செஞ்சி டிச 24
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை இ.கே.ஆர் மருத்துவமனை வளாகத்தில் செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் 2025 ஆம் ஆண்டில் கல்விப் பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சாசன தலைவர் குறிஞ்சி வளவன் அனைவரையும் வரவேற்றார் .
ரோட்டரி சங்கத்தின் தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கே.பி.மோகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக
ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர்கள் நம்மாழ்வார், கண்ணையா ரமேஷ் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் செயலாளர் நாராயணமூர்த்தி பொருளாளர் சக்திவேலன் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், கருணைவேல், ஜெரால்டு, சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜி.டி பாலசுப்ரமணியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் மாணிக்கம் .மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் செய்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்