June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..!

வந்தவாசி, ஜூன் 05:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி..ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் பாலாஜி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, தெள்ளாறு வட்டார கல்வி அலுவலர்கள் கோ.குணசேகரன், எ. பச்சையப்பன் ஆகியோர் பங்கேற்று, மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து, மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், புத்தக பை, சீருடை உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச் செல்வி, ஆசிரியர் பயிற்றுநர் செந்தில் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் உதவி ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.