June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருது ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.

சங்கராபுரம் ஜன 28

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், சிறந்த ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டதற்காக சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதினை கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சனா காமராஜனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

உள்ளூர் வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்துதல், அடிப்படை வசதிகள் மேம்பாடு, தூய்மை பணிகள், பொதுமக்கள் நலத் திட்டங்களை நேரடியாக கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கையால் விருதை பெற்றுக்கொண்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விருது, கிராம ஊராட்சிகளில் செயல்திறன் மிக்க நிர்வாகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.