திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டி ஊராட்சில் உள்ள சிப்காட் தொழில் பூங்கா வளாகத்திள் வரும் 14 ம் தேதி சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி சிப்காட் வளாகத்தில் மாபெரும் தூய்மைப்பணியானது இன்று துவங்கியது. 14 ம்தேதி வரை இப்பணி நடைபெற இருப்பதைத் தொடர்ந்து சிப்காட் போகி 2026 நிகழ்வின் மாபெரும் தூய்மைப் பணியினை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன்,மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன்,சிப்காட் தலைமை அலுவலக கண்காணிப்பு அலுவலர் அனிதா அசோகன் மற்றும் மணப்பாறை சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிப்காட் வளாகத்தில் தூய்மை பணியினை கொடி அசைத்து துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சரவணன்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!