பெருந்துறைதவெகவினர் ஈரோடு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு. ஜூன். 02
ஈரோடு மாவட்டம் பெருந்துறை
குன்னத்தூர் வழியாக கரண்டிபாளையம் பகுதிக்கு புதியதாக கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பெருந்துறை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈரோடு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
பெருந்துறை ஒன்றிய தமிழக வெற்றிக்கழக பொருளாளர் யோகேஸ்வரன் என்பவர் நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது..
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் தினசரி மாலை 4. 15 மணி அளவில் பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பி 3 பேருந்து அனைத்து பள்ளி குழந்தைகளையும் ஏற்றி செல்கிறது. அதில் சுமார் 4.15மணி அளவில் பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து குழந்தைகளை ஏற்றுக் கொண்டு சுமார் 4.35 மணி அளவில் வீரணம் பாளையம் அடுத்த கராண்டிபாளையம் பிரிவு ரோட்டில் இறக்கி விட்டு செல்கின்றனர்.
காரணமாக பள்ளி குழந்தைகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். இது குழந்தைகளுக்கு உடல் சோர்வை ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதிக்கு வரும் பேருந்து மாலை நேரத்தில் மட்டும் கரண்டிபாளையம் ஊருக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் மேலும் பெருந்துறை பகுதியில் உள்ள கைக்கோலம் பாளையம் முதல் சுள்ளியம் பாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி மிகவும் சேதம் அடைந்து உள்ளதால், அதனைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் அந்த சாலையில் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அந்த சாலையை சீரமைப்பு செய்து, சரி செய்து கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!