June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சமூக சேவகர் சி. முருகன் பிறந்தநாள் விழா – 1000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

​புதுச்சேரி | ஜனவரி 7:

​புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் திரு. சி. முருகன் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, சமூக சேவகர் சி. முருகன் அவர்கள் தனது ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 பெண்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.தனது பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த சமூகப் பணியை அவர் மேற்கொண்டார்.
​இந்த விழாவில் தொகுதி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அறுசுவை உணவுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது! இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.