July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு;

ரூ.1 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு
விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்:

திருச்சி ஜூலை 13

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாதுளத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது மாநில நிர்வாகிகள் மேகராஜன், பரமசிவம், தட்சிணாமூர்த்தி, மதிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில்,
காவிரியில் கர்நாடக அரசு ஜனவரி முதல் மே மாதம் வரை தமிழகத்துக்கு 12 புள்ளி 75 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அதேபோன்று ஜூன் மாதத்தில் ஒன்பது புள்ளி 19 டி எம் சி தண்ணீரும் ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் திறந்து விட வேண்டும் அவ்வாறு முறைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் ஆனால் தண்ணீர் திறந்து விடாத காரணத்தினால் குறுவை சாகுபடி செய்ய இயலவில்லை ஆகவே தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது.