கள்ளக்குறிச்சி மே 07
விருதுக்கு பரிந்துரைக்கப்படும் நபர்கள், சாதனைகளில் பொது சேவையின் ஒரு
அங்கமாக இருப்பது அவசியம். தேர்வுக்கான அளவுகோல்கள் “excellence plus” ஆக இருக்க வேண்டும். பத்ம விருதுகள் உலகின் இரண்டாவது விருதாக இருப்பதால், ஏதாவது
ஒரு துறையில் தேசிய விருது அல்லது மாநில விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கு பரிசீலிக்க தகுதியான நபர்கள் சமுதாயத்தில் சிறந்து விளங்கும் திறமை கொண்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக இவ்விருது மரணத்திற்கு பிறகு வழங்கப்படுவதில்லை. இருந்தபோதிலும், தகுதியான சந்தர்ப்பங்களில், சிறந்த சேவை புரிந்து மரணமடைந்தாலும், ஒரு வருட
காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட துறைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சேவை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் தகுதியான சந்தர்ப்பங்களில் விதிவிலக்காக தளர்வு செய்யப்படும். மருத்துவர்கள் மற்றும்
விஞ்ஞானிகளைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அரசு ஊழியர்கள் பத்ம விருதுக்கு தகுதியற்றவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்.31.07.2026. இவ்விருதுக்கு இணையதளம் மூலம்
தகுதியான நபர்கள் விண்ணப்பித்திருந்தால், உரிய கருத்துருவினை, அறை எண்.623
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 207 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.