கள்ளக்குறிச்சி ஜன 04
கள்ளக்குறிச்சி மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சடையம்பட்டு மற்றும் செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமி மாணவ மாணவியர்கள் 13 தங்கப் பதக்கத்தையும் 9 பேர் வெள்ளி பதக்கத்தையும் 2 பேர் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
இதில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ மாணவிகள் ஜனவரி மாதம் 4 தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை பாராட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன், செயலாளர் கோபு, சேர்மன் ஏழுமலை மற்றும் சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை கொடுத்து பாராட்டினர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்