சேலம் மாவட்டம் ஏற்காடு அருகிலுள்ள செங்கலத்துப்பாடி மற்றும் குண்டூர் கிராமங்களை கடந்த சில ஆண்டுகளாக தத்தெடுத்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் Unity of Youth Foundation அமைப்பு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இவ்விரு கிராமங்களிலும் மாலை நேர டியூஷன் மையங்கள் மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் பயிலும் மாணவர்களின் அறிவை விரிவுபடுத்தும் நோக்கில், இன்று கல்விச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கல்விச்சுற்றுலாவில், மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு, குருவம்பட்டி உயிரியல் பூங்காவிற்கு சென்று இயற்கை மற்றும் விலங்கியல் தொடர்பான அறிவை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை ரேஞ்சர் திரு. சசிகுமார், Unity of Youth Foundation நிறுவனர் திரு. விஜய், மற்றும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. பழனி, திரு. சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை கல்வி மற்றும் ஒழுக்கத்தில் முன்னேற ஊக்குவித்தனர்.
மாணவர்களுக்கு இத்தகைய கல்விச்சுற்றுலா மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும், எதிர்காலத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்