வந்தவாசி, டிச 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் சிநேகிதன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மைய அலுவலக வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு நிர்வாக அறங்காவலர் சினேகிதன் இ.ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் சரசு முன்னிலை வகித்தார். ராதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, அகஸ்தியா சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் ர.சுரேந்தர் பங்கேற்று, மூன்று சக்கர பேட்டரி வண்டி, சக்கர நாற்காலிகள், 100 நலிவடைந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினார். டாக்டர் சந்திரமோகன், தமிழ்நாடு உரிமைகள் திட்ட வந்தவாசி நகர ஒருங்கிணைப்பாளருமான இயன்முறை மருத்துவர் விக்னேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, பேபி யோகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், கோல்ட் லீப் எக்ஸ்னோரா செயலாளர் கெளரி வெங்கடேஷ் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர். கோல்ட் லீப் எக்ஸ்னோரா இணை செயலாளர் கேப்டன் பிரபாகரன்
நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் கோல்ட்லீப் எக்ஸ்னோரா துணைத் தலைவர் தமிழ்ராசா, பாரதி அரிசி ஆலை வரதன், மாற்றுத்திறனாளிகள் குடும்பத் தினர் கலந்து கொண்டனர். இறுதியில் சிநேகிதன் தாரணி நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்