100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் புடவைகள் வழங்கப்பட்டது.
ஈரோடு. ஜன. 13


காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சமூக அமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சமத்துவ பொங்கல் வைத்து ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிறுவன தலைவர் சாந்தாதேவி புதுப் பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல், கரும்பு மற்றும் சேலைகள் வழங்கி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மக்கள் நல அறக்கட்டளையின் நிர்வாகிகள், திண்டல் சாந்தி, பிரியா, சத்தியமூர்த்தி, சண்முகநாதன், சௌந்தர்ராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.