தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் பி. ஆர். பாண்டியன் செயல்பட்டு வருகிறார் இவர் கடந்த 2015-ம் ஆண்டு டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட ஓஎன்ஜிசி திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது வழக்கில் மாவட்ட நீதிமன்றம் பிஆர்பாண்டியன் உள்பட சிலருக்கு 13 ஆண்டுகள் தண்டனை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இது விவசாய சங்கத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் கைது செய்யப்பட்ட பி. ஆர். பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான தீர்மானூரில் பல்வேறு விவசாய சங்கத்தினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்த கையெழுத்து இயக்கத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டு பி. ஆர். பாண்டியனை உடனடியாக விடுதலைச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்
அரியலூர் – தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!