கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்குள் முறையான அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடும் –
மத்தூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் பல இடங்களில் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்காகவும், குடிநீருக்காகவும் பொதுமக்கள் நீண்ட தூரம் அலைந்து திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும்
மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல தெருக்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் ஊர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் குறிப்பாகப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இருட்டைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், விபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சுகாதார சீர்கேட்டில் சாக்கடை கால்வாய்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமல் உள்ளன. கால்வாய்களுக்குள் குப்பைகள் தேங்கியும், செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படுகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் இது குறித்து மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டும், புகார்கள் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளின் இத்தகைய மெத்தனப் போக்கினால் அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் போராடும் நிலை நீடிக்கிறது.
தண்ணீர், தெருவிளக்கு, தூய்மை என அனைத்து நிலைகளிலும் மத்தூர் பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து, போர்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்” என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரசு அதிகாரிகள் அலட்சியம்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!