செஞ்சி மார்ச் 15
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் அணிலாடி ஊராட்சியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தைபழுது பார்த்து புனரமைக்க வேண்டும் என அப்பகுதிகிறிஸ்துவ பெருமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கிறிஸ்தவமக்களின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 64 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்புனரமைக்கும் பணி தொடக்க விழா நிகழ்ச்சி அணிலாடி தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்தமிழரசன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் பிலோமினாள் அருமைநாதன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு 1 கோடியே 64 லட்சத்தி46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தூய இருதய ஆண்டவர் ஆலையத்ததை பழுதுபார்தல் மற்றும் புனரமைக்கும் பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா சங்கர்,வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் மொடையூர் துரை,பங்குத்தந்தைகள் பெர்மாங்னஸ் பீட்டர், பள்ளி முதல்வர் ஆனந்தராஜ்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்லாரன்ஸ்,
ஒன்றிய பொறியாளர் ஆனந்தி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்,ஒன்றிய நிர்வாகிகள் ஏ.கண்ணன், சி.கண்ணன், ஊராட்சி நிர்வாகிகள் ஹென்றி, ராபர்ட்,தாஸ், சூசை ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஊராட்சி செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election