April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக கவிதைத் திருவிழா…!

வந்தவாசி, ஏப் 07:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக கவிதை தினத்தையொட்டி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை திருவிழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கவிஞர் முகமது அப்துல்லா, எ.தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் இரா.பாஸ்கரன் வரவேற்றார்.

கவியரங்கத்தின் நடுவராக சாகித்திய அகாதெமி பால புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் பங்கேற்று, கவிதைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பற்றியும், கவிதைகளின் தன்மைகள் குறித்தும் விளக்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 30 க்கும் மேற்பட்ட கவிஞர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கவிஞர்கள் பூங்குயில் சிவக்குமார், காவல்துறை மா.கதிரொளி, வந்தை பிரேம், எ.ராஜ்குமார், தலைமை ஆசிரியர்கள் க.வாசு, இரா.அருள்ஜோதி, க.சங்கர்,‌ ரயில்வே சு.தனசேகரன், நூலகர் ஜா.தமீம், கேப்டன் பிரபாகரன், சமூக ஆர்வலர் மலர் சாதிக், ஆசிரியை பா.ஜெயசுதா, பெ.சக்திவேல், கவிஞர்கள் அ.ஷமீமா, சைதானி உள்ளிட்ட கவிஞர்கள் பங்கேற்று கவிதைகளை வாசித்தனர். மேலும் சென்னையில் இருந்து வந்த கு.அசோகன், க.குணசேகரன், ந.வேலாயுதம், அன்புத்தோழி ஜெய ஸ்ரீ, பாரதிராஜா, சஞ்சீவி மோகன், ரகுநாத், பாபு சசிதரன் உள்ளிட்டோர் சிறப்பு கவிதைகளை வாசித்தனர். முன்னதாக, தென்னாங்கூர் ரஜினியின் தமிழிசை பாடல்கள் பாடப்பட்டது‌. நிகழ்வை சங்க துணைத் தலைவர் பா.சீனிவாசன் தொகுத்து வழங்கினார். இறுதியில் சங்க உறுப்பினர் ம.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp