June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ரங்கசாமியின் தலைமைக்காக மக்கள் வாக்களிக்க வில்லைவாங்கிய இலவசம் பணத்திற்க்காக வாக்களித்துள்ளனர்.ஜனநாயகம் தோற்றது .!!!.பணநாயகம் வென்றது.!!!.தேர்தல் முடிவு குறித்து ஆர் எல் வெங்கட்ராமன் கருத்து.!!!.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் கருத்து தெரிவித்து அறிக்கை :-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் தலைமைக்காக மக்கள் வாக்களிக்க வில்லை மாறாக பெற்றுக்கொண்ட இலவசம் மற்றும் பணத்திற்காக வாக்களித்து உள்ளார்கள் என்பதுதான் உண்மை.
இதில் உண்மையான ஜனநாயகம் தோற்றுவிட்டது. பணநாயகம் வென்று விட்டது.
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்பாகவே இலவசம் , பணம் மற்றும் டோக்கன் கொடுத்து சிலர் மக்களை தங்கள் வசம் சரி செய்து விடுகிறார்கள். மக்களும் கடந்த நிர்வாக திறமையற்ற ஆட்சியின் காரணமாக வசதி படைத்தவர்கள் மேலும் வசதி படைத்தவர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறிவிட்ட காரணத்தினால் மக்கள் தேர்தலை ஒரு திருவிழாவாக நினைத்து கொடுக்கப்படும் இலவசம் மற்றும் பணம் அவர்களுக்கு தேவைப்படுவதால் அதனை பெற்று கொள்கிறார்கள்.. அதை பயன்படுத்தி யார் மக்களை தன் வசம் தக்க வைத்து சிறப்பாக செயல் படுகிறார்களோ அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவார்கள் என்கிற அடிப்படையில், அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தேர்தல் நேரத்தில் தனது கட்சியில் சேர்த்து போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். தனது முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக உண்மையாக கட்சிக்கு உழைத்தவர்களை விட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பாதி பேருக்கு வெற்றி பெற வாய்ப்புள்ள மாற்று கட்சி நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். மாறாக கடந்த கால ஆட்சிக்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதைத்தான் ரங்கசாமி செய்துள்ளார். இருப்பினும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறுவார்கள் அதனால் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் மக்கள் தீர்ப்பை மனதார தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறது .

கடந்த தேர்தலின் போது, மாநில அந்தஸ்து பெறுவதற்காக பிஜேபி உடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று கூறிய வாக்குறுதி மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சி. மாறாக தனி நபர் வருமானம் குறைந்து ஒவ்வொருவர் தலையிலும் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆகவே இந்த தேர்தல் முடிவு ரங்கசாமியின் கடந்த கால ஆட்சிக்காக மக்கள் வாக்களிக்கவில்லை மாறாக இலவசம் மற்றும் பெற்ற பணத்திற்காக மட்டுமே வாக்களித்துள்ளனர் என்பதே உண்மை. இனியாவது மக்களுக்கான ஆட்சியை நடத்த ரங்கசாமி அவர்கள் முன்வர வேண்டும் என்று ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.