புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்
குறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின்
அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் பேராசிரியர்
மு இராமதாஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர்
எ. மூ.ராஜன், துணைத் தலைவர் நித்தியானந்தம், மாநிலச் செயலாளர்கள் ரவிக்குமார் மோகனசுந்தரம் ,பரந்தாமன் தொகுதிப் பொறுப்பாளர்கள் காலாப்பட்டு குமார், நெல்லித்தோப்பு டில்லி பாபு, ஏம்பலம் முருகையன் ,அரியாங்குப்பம் தனஞ்செயன், மீனவர் அணித் தலைவர் இதய சந்திரன், ஆனந்தன் , கலியபெருமாள், அபிலாஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் தொகுதிப் பொறுப்பாளர்கள் அணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் நிற்பது பற்றிய பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
ஒரு பிரிவினர் தேர்தலில் நின்று நம் சக்தியை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ள நமது கழகம் அதன் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதன்முதலாக பங்கேற்க வேண்டும் என்ற கொள்கையை பிடிப்புடன் இருந்த காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் நின்று நம் பலத்தைக் காட்டி விட்டு சட்டமன்றத் தேர்தல் நிற்க வேண்டும் என்றும் அழுத்தமாகத் தங்கள் கருத்து வெளியிட்டனர்.
நீண்ட விவாதத்துக்கு பிறகு இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும். அந்த முடிவை தனியாக நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு ராமதாஸ் அறிவிப்பார் எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம்
இனிதே நிறைவுற்றது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election