February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மாநில ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் திரு. அமுதரசன் அவர்களின் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை (MGNREGA) பாதுகாக்கும் போராட்டம் நடைபெற்றது. கிராமப்புற தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல மாநிலங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அகில இந்திய தலைவர் திரு. சுனில் பண்வார், துணை தலைவர் திரு. குணால் பானர்ஜி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு வெ. வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் திரு வே.நாராயணசாமி சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து ஆலோசனைகளும் மற்றும் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர்

இதில் புதுச்சேரி பொறுப்பாளர் திரு. ரமேஷ், தெலுங்கானா பொறுப்பாளர் திரு. சுபாஷ், தமிழ்நாடு பொறுப்பாளர் இனாமுல் ஹசன், காளிமுத்து மற்றும் ஆந்திரா பொறுப்பாளர் திரு. விஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

போராட்டத்தின் போது 100 நாட்கள் ஆண்டுக்கு வேலை உறுதி, கூலி நேரத்தில் வழங்குதல், வேலை செய்வது அரசியலமைப்பு உரிமையாக மீண்டும் நிலைநாட்டுதல், பஞ்சாயத்து ராஜ் அதிகாரங்களை பாதுகாத்தல், MGNREGA தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ₹400 ஊதியம் வழங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு நிலுவை நிதி உடனடியாக விடுவித்தல் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை செய்யும் உரிமை, கூலி பெறும் உரிமை மற்றும் உள்ளூர் நிர்வாக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒருங்கிணைந்த கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரியாங்குப்பம் RGPRS தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் RGPRS மாநில துணைத் தலைவர் திரு. கோவிந்தன், மாநில பொதுச் செயலாளர் அரங்க முருகையன், சங்கர் பாபு, பாஸ்கர், சிவசங்கரன், வேல்முருகன், புஷ்பராஜ், மாநில பொருளாளர் பழனிவேலு, மாநில செயலாளர்கள் சத்தியசீலன், சிவபாலன், ஹேமவதி செல்வம், சசிகுமார், ஜே.பி. ஜான் பாட்ஷா, மாநில இணைச் செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் தாண்டவராயன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சிவபெருமான், மாவட்ட பொருளாளர் வாசு, மாவட்ட செயலாளர் நாராயணசாமி, தொகுதி தலைவர்கள் ஹரி கிருஷ்ணன், செல்வம், திருநாராயணன், வீராசாமி,ஜி.எம். சங்கர், ராமநாதன், தொகுதி துணைத்தலைவர்கள் செல்வகுமார், ரவி, ரஞ்சித், உள்ளிட்ட பஞ்சாயத்து ராஜ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp