February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

“நைட் வீடியோ கால் பண்ணு”.சேலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிறுமியிடம் அத்துமிரல்.

சேலத்தில் பள்ளி சிறுமிக்கு வந்த ஆபாச மெசேஜ்.

சிறுமிக்கு தொடர்ந்து இரவில் பாலியல் டார்ச்சர் கொடுத்த சேலம் தனியார் பள்ளி ஆசிரியர்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ப்ரீ கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

கடந்த வருடம் இந்த பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவி ஒருவருக்கு தொடர்ந்த இரண்டு நம்பர்களிலிருந்து ஆபாச மெசேஜ் வந்துள்ளது.

மாணவி பயின்ற பள்ளியில் தற்போது ஆசிரியர்களாக பணியாற்றி வரும் அப்பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (36), தினகரன் (41) ஆகிய இருவரும் பள்ளியில் இருந்த மாணவியின் செல்போன் என்னை எடுத்து தொடர்ந்து whatsapp மூலமாக மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் மாணவியை இரவு நேரங்களில் வீடியோ கால் செய்யக்கோரி மிரட்டியுள்ளனர். இதனை வெளியே சொன்னால் பிரச்சனை வந்துவிடும் என்று பயந்த மாணவி இது தொடர்பாக யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் இரவு நேரங்களில் வீடியோ கால் செய்யச் சொல்லி டார்ச்சர் செய்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் தொல்லை தாங்காமல் மாணவி இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் மற்றும் ஜெகதீசனை கைது செய்துள்ளனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp