வந்தவாசி, ஜூன் 22:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ஸ்ரீ பஞ்ச கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தெய்யார் பெருமாள் கோவில், மூடுர் ஸ்ரீனிவாஸ பெருமாள் கோயில், நல்லூர் ஸ்ரீ சுந்தரவரத பெருமாள் கோவில், பாப்பநல்லூர் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோவில், இளங்காடு ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோவில், ஸ்ரீரங்கராஜபுரம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் ஆகிய 6 பெருமாள் கருடசேவை வைபவம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
புதுச்சேரி,முதலியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்தர்சன ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது
முதல்வர் பிறந்தநாளையொட்டி தங்கத் தேர் இழுத்து வழிபாடு..!
பேப்பர் செய்தி