திருப்பூர் நவம்பர்- 15
வாக்காளர் திருத்த பணியில் குடியுரிமை தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது தான் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது! டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர். அபூபக்கர் பேட்டி.
திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர்.
அபூபக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு வருகிற ஜனவரி மாதம் 28ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேசிய தலைவர். காதர் மைதீன் தலைமையில் நடைபெறுகிறது. என்றும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என்றும் மேலும் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் மேலும் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் எதிர் வருகின்ற 19ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுவதாகவும் இந்த கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து தகவல்களை பரிமாற உள்ளதாகவும் வாக்காளர் திருத்த பணி முறையாக நடக்கிறதா என்றும் நிர்வாகிகள் இடம் கருத்து கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க உள்ளதாகவும் குறைந்த காலத்தில் வாக்காளர் தீவிர திருத்தணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் வாக்காளர் திருத்த பணியில் குடியுரிமை தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது தான் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அலுவலர்கள் பற்றாக்குறை குறைந்த கால அவகாசத்துக்குள் இந்த பணியை எப்படி செய்ய முடியும் என்பதை கேள்வி வடிவத்தின் பெற்றோரின் ஆவணங்களை தகவல்களை அனைவராலும் எப்படி சமர்ப்பிக்க முடியும் என்றும் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகவும் குடியுரிமை குறித்த கேள்வி கேட்கக்கூடாது இந்திய தேர்தல் ஆணையத்தில் எந்தவித குறிப்பிடும் இருக்கக் கூடாது என்றும் அதேபோல டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில தலைவர். முகமது யூனுஸ் திருப்பூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையது முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!