February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றி கழகம் தெற்கு மாவட்ட சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது ஜெயந்தி விழா!!

கோவை -ஜன:04

முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி வீரபாண்டி கட்டபொம்மன் மற்றும் வீர பெண்மணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை போற்றும் விதமாக அன்னதானம் மற்றும் அவர்களின் திருவுருவட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் வரும் மார்ச் மாதம் கோவையில் தளபதி அவர்களின் பொதுகூட்டம் நடைபெரும் என தெரிவித்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp