திருச்செங்கோட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கௌரிவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்..
திருச்செங்கோடு. ஜூன் 24
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
திரைப்பட நடிகராக, திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து பல்வேறு சோதனைகளுக்குப் பின்பு, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சி அமைத்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களுக்கான பணிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து வருகிறார்.
ஒரு சிறந்த அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டு அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு அனைவரும் தங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் அவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டாக்டர் கே ஜி அருண்ராஜ் முதலமைச்சர் விஜய் பெரிதும் பாராட்டும் வகையில் தன்னுடைய துறையில் பல்வேறு சீரிய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் முதல் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை மக்களுக்கு தேவையான மருத்துவம் கிடைக்கும் வகையில், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திய, நேரடி ஆய்வு மூலமாகவும் மருத்துவ பயனாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய சிகிச்சை முறைகள் கிடைப்பதற்கு தனது பணியில் அமைச்சர் டாக்டர் கே ஜி அருண் ராஜ் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர்C. ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அவருக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்கள் அனைத்து கட்சி முக்கிய தலைவர்கள், தமிழக வெற்றி கழகத்தினர் என அனைத்து தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு ஒன்றிய நகர உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அமைச்சர் டாக்டர் கே ஜி அருண்ராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் சார்பில் து த்தாராம் பாளையம் சீனிவாசம்பாளையம் வரை அன்றைய ஒரு நாள் மட்டும் மினி பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச பயண ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும் நகர செயலாளர் இப்ராஹிம் சார்பில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு, ஆயிரம் பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பிக்கும் வகையாக தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அனுபவிக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கிழக்கு நகர செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் திருச்செங்கோடு ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது