சேலத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படை,நிலை கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்க சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததால் கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டன. 11 தொகுதிகளில் மொத்தம் ரூ. 8.30 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் ரூ. 2.74 கோடி பணம், ரூ. 33.65 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 25.13 லட்சம் போதைப்பொருள்கள், ரூ. 2.39 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்கள், ரூ. 2.57 கோடி மதிப்பிலான பரிசு பொருள்கள் அடங்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஒருசிலா் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.1.12 கோடி பணம், ரூ. 2.34 கோடி தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ. 3.16 லட்சம் பரிசு பொருள்களை திரும்பப்பெற்றனா். உரிய ஆவணம் இன்னும் தாக்கல் செய்யப்படாததால் ரூ. 4.79 கோடி பணம், பொருள்கள் கருவூலத்திலேயே உள்ளன.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!