வீரப்பனிடம் துப்பாக்கி என்னிடம் அவர் ரத்தம் – பஞ்ச் பேசும் மகள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரான வித்யாராணி வீரப்பன் நேற்று,சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அவர், கலெக்டர் பிருந்தாதேவியிடம் கருமலைக்கூடல் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி மனு அளித்தார். பின்னர் வித்யாராணி வீரப்பன் அளித்த பேட்டி: மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள என்னை, அத்தொகுதி மக்கள் அப்பாவை பார்த்த மாதிரி தான் பார்க்கிறார்கள்.
வீரப்பனிடம் துப்பாக்கி இருந்தது. என்கிட்ட துப்பாக்கி இல்லை. ஆனால், அவரோட நேர்மை என் ரத்தத்தில் இருக்கிறது. மேட்டூர் எனது சொந்த மண். அதேமாதிரி ரத்தம் சிந்திய மண். அந்த ரத்தத்தை துடைத்து, அவர்கள் கூட கைகோர்த்து நின்னு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்படுவேன் என்று என்னை மக்கள் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!