சேலம் அரசு மருத்துவமனையில் எலிகளை கட்டுப்படுத்தகோரியும்,நோயாளிகளை பாதுகாக்ககோரியும்!
மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள கோரியும் மருத்துவமனை முதல்வருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் கிழக்கு மாநகர குழு எலி பிடிக்கும் அட்டைகளோடும் கூண்டுகளோடும் மருத்துவமனை முதல்வருக்கு நூதன முறையில் மனு அளிக்கும் போராட்டத்தினை நடத்தினர்.நிகழ்விற்கு கிழக்கு மாநகரத் தலைவர் பிரபாகர் தலைமை வகித்தார். கிழக்கு மாநகர செயலாளர் விமல் குமார்
துணைச் செயலாளர் வீரமணி மாநகர குழு உறுப்பினர்கள் ஆனந்த்,அப்பாஸ் மற்றும் மோகன், பூமாலை,மணிகண்டன்.மற்றும் பதினைந்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு கல்லூரி முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் சேலம் அரசு மருத்துவமனையை மருத்துவமனை நிர்வாகம் சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளனர்.
இவ்வியக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் DYFI சேலம் மாவட்ட அமைப்பு குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் எலி தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மனு.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!