February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சாலை வசதி போக்குவரத்து வசதி இல்லாத ஈரோடு மாவட்டம் கத்திரி மலை மலை கிராமம்…

அரசு உண்டி உறைவிட பள்ளி மாணவர்களுக்கு ஈரோடு தயா அறக்கட்டளை பெரும் உதவி.

ஈரோடு. ஜன. 26

சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருக்கும் ஈரோடு மாவட்டம் கத்தரி மலை பகுதியில் செயல்படும் அரசு உண்டி உறைவிட பழங்குடியினர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பெரும் முயற்சி எடுத்து ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில், உடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட மக்களுக்கு தங்களின் மாவட்டத்தில் இப்படி ஒரு பழங்குடியினர் மலை கிராமம் இருக்கிறதா..? என்று கூட தெரியாத அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியாக இருந்து வருவது கத்திரி மலை என்ற பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்த மக்கள் வாழும் ஒரு மலை கிராமம்.

ஈரோடு நகர மையப் பகுதியில் இருந்து சரியாக 100 கிலோ மீட்டருக்கு அப்பால் மலை உச்சியில் தனியாக இருக்கும் ஒரு மலை கிராமம் தான் கத்தரிமலை பகுதி.

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கே தெரியாத ஒரு மலை கிராமம். அதோடு அரசு சார்ந்த ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுக்கு குறைவான நபர்களுக்கு தான் இந்த கத்திரி மலையை அவர்கள் கேள்வி மட்டுமே பட்டிருப்பார்கள். ஈரோடு மாவட்டத்தில் கத்திரி மலை என்ற ஒரு பழங்குடியினர் வகுப்பு சேர்ந்த மக்கள் வாழும் மலை கிராமம் ஒன்று இருப்பது பெரும்பாலான அரசு சார்புடைய நபர்களுக்கு கூட இதனால் வரை தெரியாமல் இருந்து வருகிறது.

பெரும்பாலான மக்களும் அரசு அதிகாரிகளும் தெரிந்திடாத ஒரு ஊராக கத்தரிமலை மலை கிராமம் இருந்து வருகிறது.

ஈரோட்டில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கத்திரி மலை கிராமத்தில், சுமார் 320 மலை கிராம பழ குனியினர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்களுக்கு எந்தவிதமான அரசின் அடிப்படை வசதிகளும் பெரிய அளவில் செய்து தரப்படவில்லை. இங்கு 75 ரேஷன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கத்திரி மலையின் அடிவாரமாக இருக்கும் கத்தரிப்பட்டி பகுதியில், மாதத்திற்கு ஒரு முறை வாகனம் மூலம் ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை அன்று விநியோகம் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

கத்திரி மலையின் அடிவார பகுதியான கத்தரிப்பட்டி பகுதியில் இருந்து இந்த ரேஷன் பொருட்களை கத்திரி மலை பழங்குடியினர் தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்கு, கத்தரிப்பட்டியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கத்திரி மலை பகுதிக்கு கரடு முரடான செங்குத்தான சாலையில் ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதற்கு, கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் தனது சொந்த பணத்தில் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து, சரியான முறையில் சாலை வசதி இல்லாத கரடு முரடான மலை பாதையில் செல்வதற்கு என்று பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட டிராக்டர் மூலமாகவே, பொருட்களை அந்த மக்கள் கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கத்திரி மலையின் உச்சியில் வாழும் பழங்குடியினர் இன மலைவாழ் மக்களின் குழந்தைகள் அங்குள்ள அரசு உண்டி உரைவிட பள்ளியில் படித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் என்பது பெரிய அளவில் இல்லாத நிலையிலும் அந்த பள்ளியில் சுமார் 50 மலைவாழ் மக்கள் பழங்குடியினர் இணைப்பை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அந்த குழந்தைகள் அங்கு படித்து வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் இன மக்கள் விவசாய கூலி வேலைக்கு சென்று வருவதால் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் ஒரு முன்னேற்றம் இல்லாமல் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக அங்கு செயல்படும் உண்டி உரைவிட பள்ளியில் படித்து வரும் பழங்குடியினர் இணைத்து சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு, பெற்றோர்களாலும், அரசு நிர்வாகத்தாலும் பெரிய அளவில் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியவில்லை. இதனால் அந்த பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான உடைகள் மற்றும் காலணிகள், கல்வி உபகரணங்கள், பள்ளியின் சமையல் பொருட்கள் என இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அங்குள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து எடுத்துக் கூறி, அங்குள்ள பழங்குடியினர் பள்ளிக் குழந்தைகளுக்கு தங்களின் தயா அறக்கட்டளையின் மூலமாக, கல்வி உதவிகளை வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின மேற்பார்வையில், வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் வானத்துறையின் உதவிகளோடு, ஈரோடு தயா அறக்கட்டளை, கத்திரி மலை அரசு உண்டி உரைவிட பள்ளியில் படித்து வரும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த சுமார் 50 குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் செய்ய களத்தில் இறங்கியது.

அதற்குரிய தேவையான பொருட்களை எடுத்துச் சென்று, கத்திரி மலையின் அடிவாரப் பகுதியான கத்தரி ப்பட்டி பகுதியில் இருந்து கரடு முரடான சாலைகளின் வழியாக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட டிராக்டரில் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று, அந்த பழங்குடியினர் இன குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு கொண்டு சென்று, அந்தக் குழந்தைகளுக்கு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் வழங்கினார்.

மேலும் அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை கண்டு அவர்களுக்கு வாலிபால் பயிற்சியையும் டாக்டர் என் எம் பிரதீப் வழங்கினார். அதோடு அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு டீ சர்ட் வாலிபால் விளையாட்டுக்கான ஜெஸ்ஸி மற்றும் பள்ளி க்கூடத்தில் சமையலுக்கான சமையல் செய்யும் பொருட்களையும் அவர் வழங்கினார்.

அதோட அப்பகுதியில் வசிக்கும் மலை கிராம பழங்குடியினர் மக்களை அழைத்து நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும், மூலமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்து அதனை ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி அந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியும் அளித்தார்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையில், சிரத்தையோடு தங்களின் மலை கிராமமான கத்திரி மலைக்கு வந்து குழந்தைகளுக்கு உதவி செய்து, தங்களின் குறைகளையும் கேட்டறிந்து சென்ற ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் என் எம் பிரதீப்புக்கு அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழின் ஈரோடு மாவட்ட செய்தியாளர் சதாசிவம் மற்றும் காவல்துறை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp