February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானம் துவக்கம்!!

கோவை டிசம்பர்: 31 கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானத்தை ரெட் கிராஸ் சொசைட்டி சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி துவக்கி வைத்தார்..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக (DANA) தானா ரெட் கிராஸ் இரத்த சேகரிப்பு மையம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி வளாகத்தில் அண்மையில் துவங்கப்பட்டது..

DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் மிக அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்களை கொண்டு , இரத்தம் சேகரிக்கப்பட்டு,
அதனை பாதுகாப்பாக சேமித்து வைத்து பல மருத்துவமனைகளின் இரத்த விநியோகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக துவங்கப்பட்டுள்ளது..

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் இலாப நோக்கற்ற அடிப்படையில் நோயாளிகளுக்கு இரத்தத்தை DANA (தானா) சேகரிப்பு மையம் வழங்க உள்ளது..

இந்நிலையில் DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானம் துவங்கப்பட்டது..

இதற்கான துவக்க நிகழ்ச்சியில், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்பெர்சன் இரத்த தானத்தை துவக்கி வைத்தார்..

இதில் அவருடன் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மோகன் சங்கர்,பொருளாளர் கலாவதி, செயலாளர் பூங்கோதை உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

முதல் நாளாக துவங்கப்பட்ட இரத்த தான நிகழ்வில், கோவை ஜி.ஆர்.ஜி.கல்வி நிறுவனம், சந்திரா குழும நிறுவனம், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி, லட்சுமி கிரஹா எண்டர்பிரைசஸ்,சந்திரா ஹுண்டாய் மற்றும் சந்திரா ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்..

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி வளாகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ள இந்த இரத்த மையத்தில், ஒவ்வொரு மாதமும் சுமார் 500 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
YouTube
Instagram
WhatsApp