சமீபத்தில் காவேரிப்பட்டிணம் பகுதியில் பச்சிலம் ஆண் குழந்தையின் உயிரைக் காக்க, மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவல் துறையினர் மற்றும் அரசு மருத்துவக் குழுவினருக்கு ஜெசிஐ கிருஷ்ணகிரி அமைப்பின் சார்பில் நேரில் சென்று பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
பிஞ்சு உயிரை மீட்பது குறித்த தகவல் கிடைத்தவுடன், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சரவணன் துரிதமாகச் செயல்பட்டு, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டார். அவரது உடனடித் தலையீடு அந்த உயிரைக் காப்பதில் மிக முக்கியப் பங்காற்றியது.
மீட்கப்பட்ட குழந்தையை உடனடியாக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு பணியாற்றிய மருத்துவர் அபிநிஷா மற்றும் செவிலியர் சுகந்தி அடங்கிய மருத்துவக் குழுவினர், குழந்தைக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை உரிய நேரத்தில் அளித்தனர். மனிதாபிமானத்துடன் அவர்கள் ஆற்றிய இந்த மகத்தான சேவை அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்துள்ளது.
இவர்களின் அர்ப்பணிப்பையும், மனிதாபிமான மிக்க சேவையையும் கௌரவிக்கும் விதமாக,ஜெசிஐ கிருஷ்ணகிரி தலைவர் கோகுல் சின்னசாமி இன்று நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இது குறித்து ஜெசிஐ கிருஷ்ணகிரி தலைவர் கோகுல் சின்னசாமி கூறுகையில்:
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் மருத்துவக் குழுவினரே நிஜமான ஹீரோக்கள். மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இவர்களது செயல் நிரூபித்துள்ளது. இவர்களது சமூகக் கடமை போற்றுதலுக்குரியது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!