June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு குழு சார்பாக 16 முதல் 20 வயது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட் போட்டிகள்!!

கோவை: பிப்-11
சேரன் 36 என்ற பெயரில் நடைபெற்றது. மொத்தம் 30 அணிகளாக பங்கேற்றனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா அன்பழகன் போட்டியில் பங்கு பெற வருகை தந்த அனைத்து மாணவ மற்றும் பொதுமக்களை வரவேற்று உரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பூங்குழலி போட்டிகளை துவக்கி வைத்தார். அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில், வெற்றி கிரிக்கட் கிளப் அணி முதலிடம் பெற்று வெற்றி கோப்பை மற்றும் ரூபாய் 7000 ரொக்கப் பரிசினை வென்றது. இரண்டாம் இடம் பெற்ற ஹிந்துஸ்தான் அணி வெற்றிக் கோப்பை மற்றும் ரூபாய் 5,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை தக்க வைத்த YOUNG 11 அணிக்கு ரூபாய் 2,500 ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. நான்காம் இடம் பெற்ற Unexpected 11 அணிக்கு ரூபாய் ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை அளிக்கப்பட்டது. சேரன் 36 கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் துறை பேராசிரியர் திரு கௌதம் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் திரு பாரதி அவர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்.