விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்குமாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ப. சேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள்ரவிக்குமார், அருணகிரி, அமுதா ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், சீனிராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழுஉறுப்பினர் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின்பிறந்தநாள் விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நகராட்சி பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மார்ச் மாதம் முழுவதும்கழக இருவண்ண கொடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கியும், ஆதரவற்றோர் முதியோர்இல்லத்தில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவினை வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சரின் பிறந்தநாளில் அனைத்து பகுதிகளிலும் முதலமைச்சரின் அனைத்துசாதனைகளை விளம்பரப்படுத்திடவேண்டும் .
மார்ச் 9ஆம் தேதிகழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகசார்பில் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழகங்களின்சார்பாகவாகனங்கள் மூலம் பெருமளவில் திமுகவினர்கலந்து கொள்வது எனவும்,
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளின் படி விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சி மயிலம் திண்டிவனம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியம் நகர பேரூர் ஊராட்சி கிளைக் கழகங்களில்பிப்ரவரி 23 முதல் மார்ச் 8ஆம்தேதி வரை வெல்லும் தமிழ் பெண்கள் ஸ்டாலின் படை பரப்புரையை சிறப்பாக நடத்துவது எனவும்,
இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 23ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இதில் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்திடும் வகையில் கழக நிர்வாகிகள் தோழர்கள் முன்னின்று செயல்படுத்துவது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, சேது நாதன், செந்தமிழ் செல்வன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா,பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரேசன், மணிவண்ணன், வீடூர் ரவி,சாந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம்,ராஜாராமன், அண்ணாதுரை, மொடையூர் துரை, இளம்வழுதி,மணிமாறன், செழியன், விஜயராகவன், பச்சையப்பன், தயாளன், பழனி, ரவிச்சந்திரன்,சாந்தி சுப்பிரமணியன்,நாராயணமூர்த்தி,திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத்,திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்,செஞ்சி ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், அணிஅமைப்பாளர்கள்ஆனந்த், கோபிநாத் ,பிரசன்னா, திலகவதி, ராஜசக்தி, கே அன்சாரி ,திருமலை, ஜி. ரவிச்சந்திரன், டாக்டர் சக்தி பிரியன், எஸ். விஜயராகவன், சிவகாமி, ரோமியன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றியநகர பேரூராட்சி கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..