புதுச்சேரி:
புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை வளாகத்தில், ஏழை எளிய மக்களுக்கான சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னை கஸ்தூரிபாய் மாற்றுத்திறனாளிகள் சமூக சேவை அமைப்பு நிறுவன தலைவர் என்.ஆர். சுசிலா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழை மக்கள் கழக நிறுவனர் பூக்கடை கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பின்வரும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்:
ஏழை மக்கள் கழக அவைத்தலைவர் செல்வராஜ்
பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் ராஜகுரு
அவயம் தொண்டு நிறுவனர் சுந்தர முருகன்
’அனைவரும் ஒன்றிணைவோம்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆனந்த பத்திரன்
செயலாளர் சமூக சேவகர் தினேஷ்
சமூக சேவகர்கள் சங்கர், ஜெகன்
மேலும், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக, அன்னதானத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும், ஏழை மக்கள் கழக நிறுவனர் பூக்கடை கமலக்கண்ணன் பாராட்டு மற்றும் நன்றியைத் தெரிவித்தார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!