ஜாபர் சாதிக் அவர்கள் வெறும் அரசியல் கட்சிப் பணியோடு நின்றுவிடாமல், திருப்பூரில் மிகச்சிறந்த சமூகச் சேவகராக வலம் வருபவர். மதம், இனம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த அன்புடன் பழகக்கூடியவர். பொதுமக்களுக்கு எந்தவொரு இடர் ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று களப்பணியாற்றும் நற்பண்பு கொண்டவரை, இந்த வழக்கில் தவறாகச் சேர்த்திருப்பது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்கள் பணியாற்றி வரும் ஒருவரை ஆதாரமின்றி கைது செய்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கினை எஸ்டிபிஐ கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பஷீர் அஹமது
மாவட்டத் தலைவர்,
எஸ்டிபிஐ கட்சி, திருப்பூர் வடக்கு மாவட்டம்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.