அதிமுக தலைமைக் கழகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் (MLA), கழகப் பொதுக்குழு உறுப்பினருமான T.M.தமிழ்செல்வம் அவர்கள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தமிழ்செல்வம் அவர்களுக்கு, தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் அறிவிப்பு வெளியானவுடன் மத்தூர் பகுதிக்கு வருகை தந்த T.M.தமிழ்செல்வம் அவர்கள், அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனுக்குச் சிறப்பு அர்ச்சனைகள் செய்து மனமுருக வழிபாடு நடத்தினார். அவருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்று திரண்டு, மத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கழகப் பொதுக்குழு உறுப்பினராகவும், முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் சிறப்பாகப் பணியாற்றிய அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357



More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..