June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உலக சுற்றுச்சூழல் தினம்மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச்சரகத்தின் சார்பாக, கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2026 சுற்றுச்சூழல் தினம் Theme: ” Inspired by nature- for climate and for our future” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நமது எதிர்காலத்திற்காக சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, ரா.கதிரவன் மணப்பாறை வனச்சரக அலுவலர் ஆ. மகேஸ்வரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை கா. தில்லைக்கரசி ஆகியோர் சுற்றுச்சூழல் தின விழா சிறப்புரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் மரக்கன்றுகளை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் நடவுசெய்தார் இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எஸ்.கே சிவ மாரிமுத்து, ஆசிரியர்கள், மணப்பாறை வனச்சரக பணியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.