February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராம பழங்குடியினர் பள்ளியில் பொங்கல் விழா.

ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் என். எம் பிரதீப் பழங்குடி மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.

ஈரோடு. ஜன. 15

ஈரோடு மாவட்டம் பர்கூர் மழை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி பழங்குடியினர் மாணவர்களுக்கு ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் பொங்கல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி மற்றும் பர்கூர் மலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு மலை கிராம பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தின் மலை உச்சி கிராமமாகவும் மாவட்டத்தின் எல்லை பகுதியாகவும் பல்வேறு மலை கிராமங்கள் இருந்து வருகின்றன. இந்த மலை கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் இந்த மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கும், மருத்துவ தேவைகளுக்கும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். முக்கியமாக மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் மக்களின் பிள்ளைகளுக்கு தேவையான அடிப்படை கல்வி வசதி கூட சரிவர கிடைக்காமல் தமிழக அரசின் சார்பில் செயல்படும் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் மலை கிராம பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் சரிவர கிடைக்காமல் இருந்து வரும் நிலை என்பது அந்த மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து இருந்து வருகிறது.

அரசு சார்பில் இவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும், அது அவர்களின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று அந்த மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடி மலைவாழ் மக்கள் பல்வேறு சமூக அமைப்புகளிடம் உதவிகள் கேட்டு பெறுகின்றனர்.

அந்த வகையில் ஈரோட்டில் செயல்படும் தயா அறக்கட்டளை தொடர்ந்து தாளவாடி மற்றும் பர்கூர் மலை கிராமங்களில் வசித்து வரும் மலை கிராம பழங்குடியினர் மாணவ மாணவர்களின் படிப்பிற்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் வட்டத்திற்கு உட்பட்ட சோளக்கணை பகுதியில் செயல்படும் அரசு உண்டி உரைவிட பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், அங்கு நேரடியாக சென்று அந்த மலைவாழ் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று பொங்கல் தினத்தில் அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

மேலும் அப்பகுதிகளில் போக்குவரத்து வசதி என்பது இல்லாத, அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் முன் வரம் வேண்டும் என்று, ஆட்சியரிடம் தயா அறக்கட்டளையின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பழங்குடியினர் மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான கல்வி உதவிகளையும் செய்து தருவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து இருப்பதாகவும் அதனை தங்களுக்கு பெற்று தருகிறேன் என்றும் தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் அந்த மக்களுக்கு உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பர்கூர் காவல் நிலைய காவல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணன், அப்பகுதி வனத்துறையை சேர்ந்த மனக்காவலர்களும் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp