February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி துவக்க விழா..

கல்லூரி தலைவர் சண்முகன் ரிப்பன் பட்டி துவக்கி வைத்தார்.

ஈரோடு. பிப்.07

ஈரோடு பெருந்துறை அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்காட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேட்டுக்கடை, வாய்க்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவ, மாணவிகளின் பல்வேறு படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், மாணவ மற்றும் மாணவிகளுக்கான 15வது படைப்பாற்றல் மற்றும் 2026 மாபெரும் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை கண்காட்சியில் சமர்ப்பித்து தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்ட ஸ்ரீ நந்தா கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் மாணவ மாணவிகளின் திறமைகளை பாராட்டி பரிசளித்து கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் சிறப்புமிக்க படைப்பாக 143 படைப்புகளும் இடம்பெற்று அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் ஒரு மாணவன் ஒரு மரம் என்கின்ற கருப்பொருளின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் வீடுகளில் வளர்ப்பதற்காக, விழாவிற்கு வந்திருந்த நிறுவனங்கள் மூலமாக 1100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பான மருத்துவம் பொறியியல் அறிவியல் சார்ந்த 1439 கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இருந்தது.

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைந்து செயலாற்றிய, ஸ்ரீ நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் யூ எஸ் ரகுபதி, தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் எஸ் நந்தகோபால், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி. மோகன் குமார் மற்றும் நந்தா கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியாளர்கள் அனைவரையும் ஸ்ரீ நந்தா கல்வி குழுமத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் பாராட்டி, கவுரவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp