திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
ஈரோடு. ஜன. 11
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை ஊராட்சி 12 வது வார்டில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வருகின்ற தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சுமார் 2 கோடியே 20 லட்சம் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருக்கு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் இந்த பொங்கல் தொகுப்பில் முழு கரும்புடன், பச்சரிசி, வெள்ளம், நெய், பாதாம், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு அளவு கரும்புடன், ரூபாய் 3000 ரொக்க பணமாகவும் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொது மக்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு பகுதியாக கஸ்பாபேட்டை ஊராட்சி 12வது வார்டு பகுதியில் உள்ள, ஆலுச்சாம்பாளையம் நியாய விலை கடையில், அப்பகுதியை சேர்ந்த வா வி காட்டுவலசு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்தப் பொங்கல் தொகுப்பை அமைச்சர் சு. முத்துசாமி அறிவுறுத்தலின்படி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு. குணசேகரன் மேற்பார்வையில், திமுக மூத்த நிர்வாகி வாவி காட்டு வலசு சென்னியப்ப கவுண்டர், 12லது வார்டு திமுக நிர்வாகி நடேசா பிரஸ்மு. செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சந்திரன், ஜெயா பிரகாஷ், நடராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!