June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – திமுகவின் திட்டங்களை தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையாக காப்பி அடித்து வெளியிட்டு வருகிறார்

எடப்பாடி பழனிச்சாமி அடிப்பதெல்லாம் காபி தான்

கடந்த தேர்தலின் போது செயல்படுத்த முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய திட்டங்களை தான் தற்பொழுது செயல்படுத்தப்படும் என கூறுவதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் இருந்து தா. பழூர், ஜெயங்கொண்டம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய பேருந்து சேவையினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.எஸ் சிவசங்கர்

அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புண்ணிய தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பது குறித்த கேள்விக்கு
கும்பகோணத்தில் இருந்து நவகிரக கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் சிறப்பாக இயங்கி வருகிறது தமிழ்நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய பக்தர்கள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர் இது குறித்தான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது. அதேபோல் சென்னையிலேயே சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக பேருந்து சேவை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களை பார்வையிடும் வகையில் சுற்றுவட்ட பேருந்துகள் இயக்கி வருகிறோம். அது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தேவைக்கேற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்த கேள்விக்கு

தமிழ்நாடு அரசு பேருந்து ஏன் விபத்து ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் தனிமனித அஜாக்கரதை காரணமாகவும் விபத்துகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு பயிற்சி அளித்து பணிக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதியாக என்ன கூறுகிறார் என்று பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம் ஏற்கனவே செய்து வருவதைதான் இன்னும் கூடுதலாக செய்வேன் என கூறுகின்றார். கடந்த தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் செய்ய முடியாது நிதி எங்கே உள்ளது இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றார். குறிப்பாக அரசு விடியல் பயணம் பேருந்து சேவையை கேலி செய்தார். அந்த திட்டங்கள் எந்த அளவிற்கு வெற்றியை பெற்று மக்களிடத்தில் வரவேற்பை பெற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதரவு பெருகி உள்ளது என்பது தெரிகிறது. அதைதான் அவர் காப்பியடிக்கிறார் திராவிட முன்னேற்ற கழகத்தை காப்பி அடித்துதான் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிக்கை வெளியிட்டுள்ளார் எனவே எடப்பாடி செய்வதெல்லாம் காபி தான் என கூறினார்

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வாக்குறுதியின் போது செய்ய முடியாது என கூறிய நீங்கள் தற்போது எப்படி செய்வீர்கள் என கேட்டால் நிர்வாக நடைமுறை தெரியும் என கூறுகிறார் அவரைவிட நிர்வாக நடைமுறை தெரிந்த காரணத்தால்தான் முதலமைச்சர் நிதி நெருக்கடி காரணம் இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார்

மகளிர் விடியல் பயண பேருந்து சேவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார்