February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர்- ஜிகே மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தந்தை மகன் ஆகியோருக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் ஜி.கே. மணி செயல்பட்டுள்ளார்

ஜி கே மணி நீக்கப்பட்டதன் மூலம் பாமக புனிதமடைந்திருக்கிறது

திமுக கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் அதற்கான வெகுமானம் சன்மானம் திமுகவிடமிருந்துஅவருக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என அன்புமணி பிரிவு பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அன்புமணி ராமதாஸ் பிரிவு பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவராக இருந்த முன்னாள் தலைவர் ஜிகே மணி பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கண்ணியத்திற்கும் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவித்தார் என்று அவருக்கு கடந்த 18ஆம் தேதி விளக்கம் கேட்டு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்பட்டது ஒரு வார காலம் அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டு அதற்குள்ளாக அவர் அதற்கு உரிய பதிலை வழங்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது அதனுடைய காலம் நேற்றுடன் நிறைவடைந்தது அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் பதிலும் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கிடைக்கப் பெறவில்லை பதில் அளிக்காமல் அமைதி காப்பது என்பது விளக்கம் சொல்வதற்கு ஏதுமில்லை என்ற செய்தியின் அடிப்படையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்காத பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ஜிகே மணி கட்சியினுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலைகளையும் அவர் நீக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தந்தை மகன் உறவினை சீர்குலைக்க கூடிய வகையில் குடும்ப நல்லுறவை கெடுக்கக் கூடிய வகையில் அவர் செய்த செயல் என்பது மாபாதக செயலை ஜிகே மணி செய்திருக்கிறார். இன்று பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதன் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி இன்றைக்கு புனித படைத்திருக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடிய இந்த நிலைபாடு தான் அவருடைய உண்மையான சுய ரூபம் இப்பொழுது வெளிப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலைய பொது அறிவிப்பு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் இதுதான் தலைப்பு எல்லா செய்தித்தாள்களிலும் இது விளம்பரமாக வெளிவந்திருக்கிறது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். செய்தித்தாள்களில் ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதனுடைய நம்பகத்தன்மை அதனுடைய தீர்ப்புகள் உண்மையானதா நம்பகமானதா என்பதை உறுதி செய்த பிறகுதான் அதை நாம் வெளியிடுவோம் ஆனால் இன்று வந்திருக்கக்கூடிய அந்த நோட்டீஸ் பல பத்திரிகைகள் வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் அதே நிலைப்பாட்டை மற்ற ஊடகங்களும் எடுத்திருக்க வேண்டும். ஒரு அபத்தமான நோட்டீசை நான் பார்த்ததே இல்லை. ரெண்டு நோட்டீஸ் வந்திருக்கு இன்னொரு நாளிதழ்ல இன்னொரு விதமான நோட்டீசு இந்த இரண்டுக்குமே ஏராளமான முரண்பாடு உள்ளன. ஒரு பிரச்சனைக்கு இண்டு விதமான கருத்துக்கள் இரண்டு விதமான தன்மை உள்ளது.
கட்சியில் இருக்கக்கூடிய இந்த நிலை வருவதற்கு முதல் முக்கிய காரணம் ஜிகே மணி தான். இந்த விரிசல் விரிவடைந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது இப்படிப்பட்ட நிலைக்கு இதை கொண்டு வருவோம் என்ற திட்டம் அவருக்கு தெரியும் அவருடைய திட்டத்தின் அடிப்படையில் தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது அந்தத் திட்டத்தை தீட்டி இதை செயல்படுத்துங்கள் என்று கொடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். திமுக கொடுத்த வேலையை அவர் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். அதற்கான வெகுமானம் சன்மானம் அவருக்கு உரிய விதத்தில் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் ஆனால் இந்த பணியை செய்ததற்கான சன்மானத்தை அவர் வந்து திமுகவிலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார் பெறுவார் என கூறினார்

Facebook
YouTube
Instagram
WhatsApp