June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

 -26, ஜூன், அறந்தாங்கி. 

புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இரு நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பிஎஸ்ஸி., கணினி அறிவியல், பிஎஸ்ஸி., கணிதம், பிஎஸ்ஸி., இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நேற்று செவ்வாய்க்கிழமையும், பிஏ., தமிழ்., பிஏ., ஆங்கிலம்., பிகாம்.,வணிகவியல், பிபிஏ., நிருவாகவியல்,
பிஏ., வரலாறு ஆகிய கலைப்பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று புதன்கிழமையும் நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கான சேர்க்கை சான்றிதழ்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் வழங்கினார். கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து. சண்முகசுந்தரம் , நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு. அன்பழகன், தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கா. காளிதாஸ், ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு. சீனிவாசன், கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் பா.கிளாடிஸ், இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ஏ. டேவிட்கலைமணிராஜ், வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் ரா.பிரகதாம்பாள், பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

செய்தியாளர் பழனிவேல்