வந்தவாசி, நவ 02
வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சீனுவாசா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை 130 நிகழ்வாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளைத் தலைவர் பூங்குயில் சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ஏ.பி.வெங்கடேசன், கவிஞர் தமிழ்ராசா,
செயற்குழு உறுப்பினர்கள் என்.இராதாகிருஷ்ணன், கோ.பாரதி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் த.சாந்தி வரவேற்றார். நகர்மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன் தொடக்க உரையாற்றினார். தமுஎகச மாவட்ட தலைவர் நா.முத்துவேலன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக, தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா அன்பே அறமென எழுக என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் க.வாசு, தமுஎகச கிளைத் தலைவர்கள் பெரணமல்லூர் பி.மாலவன், சேத்பட் எஸ்.பழனி வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, தென்னாங்கூர் மண்ணுயிர் ரஜினி, ஜான் லாரன்ஸ், முனைவர் ம.மகாலட்சுமி, சார் பிளஸ்சியா ஆகியோர்
பாடல்களை பாடினர். நிகழ்ச்சியை தமுஎகச இணைச் செயலாளர் எம்.பி.வெங்கடேசன், ம.ரகுபாரதி, பெ. எட்டியப்பன், முனைவர் சீனிவாசன், ரவி ரங்கநாதன், கவிஞர் பூவிழி, வந்தை குமரன் ஒருங்கிணைத்தனர். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் அ.அப்துல் காதர், ஜோதி நிதி உதவி பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன், எழுத்தாளர் சா.ரஷீனா, விஏஓ அர்ஜுனன், திவாகர், ஆக்ஸ்போர்ட் சதானந்தன், ஓய்வு பெற்றோர் சங்க பால்ராஜ், பெரணமல்லூர் தமுஎகச கிளை கௌதம் முத்து, காளிதாஸ்,
ஆசிரியர் பூபாலன், செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் பொருளாளர் எஸ்.காசி நன்றி கூறினார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..