February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலை கல்லூரியில் 20 லட்சம் மதிப்பீட்டில் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு பூஜையுடன் தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்……..

திருத்தணி-நவம்பர்-06

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு சுப்பிரமணியசாமி அரசினர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டம் மற்றும் இளநிலை பட்டத்தில் படிப்பதற்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்

இந்த கல்லூரியில் குடிதண்ணீர் பிரச்சினை நீண்ட காலமாக இருந்தது இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில்

திருவள்ளூர் மேற்கு திமுக மாவட்ட செயலாளர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் இந்த கல்லூரிக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில்

ஆழ்துளை கிணறு அமைத்து அருகில் உள்ள விநாயகபுரம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிதண்ணீருக்கு இந்த கல்லூரி மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கான நிகழ்ச்சி

கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை பூஜையுடன் தொடங்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் பேராசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்

இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ஏகாதேவசேனா, ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, மாவட்ட பிரதிநிதி ஷெரிப் மற்றும் பலர் உடன் இருந்தனர்…….

Facebook
YouTube
Instagram
WhatsApp