ஈரோட்டில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன் வைப்பு..
ஈரோடு. நவ.,, 13
தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தொடக்க கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோட்டில் ஒன்னாவது போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம்.. விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நூற்பாலைகளில் இருந்து வழங்கிய நூல்கள் மூலம் மூலம் வேஷ்டி உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கியும், 13 லட்சம் வேஷ்டிகள் தர பரிசோதனையில் பாலிஸ்டர் காட்டன் வார்ப்பு நூலில் வித்தியாசம் உள்ளதாக கொள்முதல் செய்யாமல், இருப்பின் இடைய ில் கிடங்கில் உள்ளது.
தர பரிசோதனை என்பது 25,000 வேஷ்டிக்கு ஒரு வேட்டி மட்டும் தர ஆய்வு செய்யப்பட்டது. இதன் பிறகு கூட்டமைப்பின் சார்பாக துணை நூல் இயக்குனரை நேரில் சந்தித்து ஐயாயிரம் வேஷ்டிக்கு ஒன்று தர பரிசோதனை செய்ய மனு. கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இயக்குனர் உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுவரை இதுவரை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. உற்பத்தி செய்து அனுப்பிய வேஷ்டி களுக்கான நெசவு கூலி உட்பட மொத்தம் 20 கோடி ரூபாய் சங்கங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சங்கங்கள் உறுப்பினர்களுக்கு நெசவு கூலி தர இயலவில்லை.
இதனால் சங்கங்கள் மிகுந்த நிதி பற்றாக்குறையால் தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே துறை இயக்குனரின் உத்தரவை உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் நெசவு கூலி 20 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேஷ்டிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 15000 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களும் குடும்பங்களை வேண்டும். என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்து உள்ளதாக கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!