June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்!!!

கோவை- நவ:13

இந்தோ-நேபால் சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

இது பற்றி பயிற்சி ஆசிரியர்கள் விஷ்ணு காந்த், சுரேந்திர பாண்டியன் ஆகியோர் கூறியதாவது :கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை சர்வதேச போட்டிகள் நடைபெற்றது. இதில் தேசிய அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும், இந்தியாவில் அளவில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சார்ந்த வாகை வீரன் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை சார்பாக ஸர்வேஸ் கோபால், ஹேம்குமார், நித்தீஷ் பாண்டி, இஷால், லியோன் தேவ், யஸ்வந்த், ஸ்ரீ ஆகாஷ், விஷ்ணு பிரியா, ஆகிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சர்வேதேச அளவில் 6 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டு இன்று பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் இந்த விருதுக்கு உறுதுணையாக நின்ற மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.