சிவகிரி பேரூராட்சி பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு..
ஈரோடு. நவ. 19
ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிவோடு சாக்கடை அமைக்கும் பணியையும் சேர்த்து செய்திட வேண்டுமென ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி பேரூராட்சி வார்டு எண் 13 பகுதியில் சுமார் 200க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சாக்கடை வசதி பல ஆண்டுகாலமாக செய்து தரப்படாமல்.
இப்பகுதியில் கழிவுநீரை அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் வீட்டிற்கு உள்ளேயே குழி தோண்டி பூமியில் இறக்கி வரும் அவல நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
வேறு சிலர் கழிவு நீரை நடைபாதையில் விடுகின்றனர். இதனால் கடுமையான சுகாதார சீர்கேடு அப்பகுதியில்.
மழைக்காலங்களில் பலவித தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம். இந்த பகுதியில் உள்ள மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி நிர்வாகம் என்று அனைவரிடமும் பலமுறை சாக்கடை வசதி அமைத்து தர கோரிக்கைகளை முன்வைத்தும், பலமுறை மனு அளித்தும் இதுவரை எங்களுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு சாலை வசதி ஏற்படுத்திய போது இந்த பகுதியில் உள்ள மக்கள் சாலை அமைப்பதோடு சாக்கடையையும் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சாலை அமைத்த பின்னிட்டு நிதி பெற்று சாக்கடை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த பேரூராட்சி நிர்வாகம் இதுவரை அந்தப் பணியை கிடப்பில்.
தற்போது வேட்டுவபாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் சாலை வரை சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல்.
இந்த முறை சாலை அமைக்கும் பொழுது சாக்கடை வசதியுடன் சாலை போடும் பணி தொடங்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இந்தப் பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு. சிவகிரி விஐபி நகர், விநாயக நகர் குடியிருப்பு பகுதிகளில் உருவான 10 வருடங்களுக்குள் சாக்கடை, சாலை, தெருவிளக்கு, குடிநீர்
, போன்ற அடிப்படை வசதிகளை அமைத்து கொடுத்த பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களை.
ஆகவே சொல்லிக்காடு குடியிருப்பு பகுதியில் உடனடியாக சாக்கடை வசதி அமைத்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கொடுமுடி தாலுக்கா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எம். சசி அப்பகுதி பொதுமக்கள் மூலமாக ஈரோடு ஆட்சியரிடம் கொடுத்த மனதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!