February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக மதுபானங்களை காரில் கடத்தி வந்த மூவர் கைது.900 மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் நவ:02

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கா ரெட்டி பாளையம் அருகே வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் செல்வம் காவலர்கள் தலைமை காவலர் ராமச்சந்திரன் மற்றும் சரண்ராஜ் ஆகியோர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வாகன தணிக்கை செய்த போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி அரசு மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து கடத்தி வந்த இருவரை கைது செய்து விசாரித்த போது பாண்டிச்சேரி வில்லியனூர் மேல் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவரின் மகன் சிவசங்கர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இருசப்பன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் ஆகியோர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஜி ஆர் பி தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் விஜய் என்பவருக்கு வாங்கி வந்ததாக கூறியதையடுத்து காவலர்கள் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு ஜிஆர்டி தெருவை சேர்ந்த விஜய் என்பவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் 900 மது பாட்டில்கள் 20 லிட்டர் சாராயம் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இரவு வந்து பணியில் விழிப்புடன் விழிப்புடனும் செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

Facebook
YouTube
Instagram
WhatsApp