நவ-25
கோயம்புத்தூரின் முன்னணி பார்னிச்சர் விற்பனை நிறுவனமான ஹோம் ஜோன், ஒண்டிப்புதூரில் தனது புதிய 15,000 சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட ஷோரூமினை திறந்தது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக வழக்கறிஞர் ஸ்ரீ. ஆர். அருணாச்சலம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நவீன வடிவமைப்பு மற்றும் அனுபவத்தை மையப்படுத்திய காட்சியகமாக அமைந்துள்ள ஷோரூமில் சோபாக்கள், ரிக்ளைனர்கள், ஹோம் தியேட்டர் சீட்டிங், டைனிங் செட்கள், படுக்கைகள், ஸ்டோரேஜ் யூனிட்கள், டெகோர் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயம்புத்தூரின் முன்னணி “ஸ்டுடியோ ரிக்ளைன்” அனுபவ மையமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
“உயர் தரத்தை நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்களின் குறிக்கோள் எனவும் இந்த புதிய ஷோரூம் மூலம் தேர்வு மிக எளிமையாகிறது,என இணை நிறுவனர் ரம்யா தெரிவித்தார்.
தொழிற்சாலையிலிருந்து நேரடி கொள்முதல், தனிப்பயன் சோபா தயாரிப்பு, விரைவு டெலிவரி மற்றும் விற்பனையுக்கு பிந்தைய சேவைகள் ஆகியவை ஹோம் ஜோனின் முக்கிய பலங்களாகும்.இதில் பிரீமியம் பொருட்களின் விரிவான காட்சிப்படுத்தல்,தனிப்பயன் சோபா & ரிக்ளைனர் தயாரிப்பு,ஹோம் தியேட்டர் அனுபவ மையம்,திறப்பு தின சிறப்பு தள்ளுபடிகள்,
பயிற்சிய பெற்ற பணியாளர்களின் ஆலோசனை வழங்கப்படுகிறது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!