ஒன்றிய அரசு கட்டுமான துறைக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை குறைக்காமல் தனிப்பட்ட கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைத்தது மக்களுக்கு பயன் அளிக்காது.கட்டுமான பொறியாளர் சங்க மாநில செயலாளர் மணப்பாறையில் பேட்டி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் துரைக்கண்ணன் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு பதவியேற்பு செய்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எம் சாண்ட், பி சாண்ட் விலை மிக அதிகமாக உள்ளது. நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு விலை ஏறியுள்ளது அதனை குறைக்கவேண்டும் என தமிழக அரசை கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் கட்டுமான துறை சார்ந்த சிறுசிறு பொருட்களின் விலையும் ஏற்றமடைந்து வருவதால் அதற்கு ஒரு தனி ஆணையம் அமைத்து விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். கர்நாடகா, குஜராத்தில் கட்டட பொறியாளர்களுக்கு என தனியாக கவுன்சில் உள்ளது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு கவுன்சில் இருப்பதுபோல் கட்டட பொறியாளர்களுக்கும் கவுன்சில் அமைத்துத் தர வேண்டும் மாநில அரசு கேட்டுக்கொள்கிறோம். சிமெண்ட் உள்ளிட்ட சில பொருட்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. ஆனால் நாம் ஒரு கட்டுமானத்தை கட்டி விற்கும் போது அதற்கான ஜிஎஸ்டி யை குறைக்கவில்லை. இதனால் மற்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பின் பயன் மக்களுக்கு சென்று சேர முடியாது என்ற நிலை உள்ளது. கட்டுமானத்தின் ஜிஎஸ்டியை குறைத்தால் தான் மக்கள் பயனடைவர். ஆகவே மத்திய அரசு கட்டுமானத் துறைக்கான ஜிஎஸ்டியை குறைத்து மக்களுக்கு நன்மை ஏற்படுத்த வேண்டும். ஆகவே கட்டுமான துறைக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். தனிப்பட்ட கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைத்தது போல் கட்டுமான துறைக்கான ஜிஎஸ்டியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றார்.
விழாவில் கட்டுமானப் பொறியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..